கர்நாடக மாநிலம் பெங்களூரு – கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரெயில் பெங்களூரு கே.ஆர்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 26651) அதே நாள் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.
இந்த வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
