கடந்த 13-ஆம் தேதி தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரக்கூடிய 50 மருத்துவர்களை அழைத்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி விருதுகள் வழங்கினார். இந்த விருதில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த திருக்குறள் தான் மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 944 -என்ற எண்ணில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரியவந்தது.
அந்த குறள் வேறு எண்ணில் இருக்கலாமா என்று தேடிப் பார்த்த போது, 1330 திருக்குறளில் அப்படி ஒரு திருக்குறளே இல்லை என்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக கவர்னர் மாளிகை நிர்வாகம் 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் திரும்ப பெற்றது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.