லாவா நிறுவனம் தனது யுவா சீரிஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போனான லாவா யுவா ஸ்டார் 3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சாதனம் பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.
லாவா யுவா ஸ்டார் 3 மாடலில் 6.75 இன்ச் HD+ LCD திரை வழங்கப்பட்டுள்ளது. 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட இந்த திரை மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்தை வழங்கும். இதில் யுனிசாக் SC9863A பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரேம் எக்ஸ்பான்ஷன் அம்சமும் இதில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் IP64 தரமான டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேமரா அம்சங்களைப் பொருத்தவரை, 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க செல்ஃபி கேமரா உள்ளன. பேட்டரி திறன் 5000mAh ஆகும். இதற்கு 10 வாட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் இன்டஸ் பிளாக் மற்றும் சியாச்சென் வைட் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 7,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் வரும் மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ரீடெயில் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போனுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் வீட்டிலேயே இலவச சர்வீஸ் வசதியும் வழங்கப்படுகின்றது.
