இப்பவே இதை செஞ்சுடுங்க., டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்களுக்கு புது ரூல்

டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் தற்போதைய மொபைல் எண்ணை வலைதளமான வாஹன் மற்றும் சாரதியில் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். இது விரைவில் அவசியமாக்கப்படலாம் என்பதால் இப்போது செய்துகொள்ளுவது சிறந்தது.

மொபைல் எண்ணை அப்டேட் செய்வதன் மூலம் அரசு தரவுகளில் உங்களுக்கும் உங்கள் வாகனத்திற்கும் தொடர்புடைய முழுமையான, சரியான, மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இருப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் உங்கள் லைசன்ஸ் மற்றும் வாகன சேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் சட்ட நெறிமுறைகள் தொடர்பான தகவல்கள் நேரத்துக்கு முன்னதாக உங்களுக்கு வரும்.

எப்படி செய்ய வேண்டும்?

முதலில் Vahan (vahan.parivahan.gov.in) மற்றும் Sarathi (sarathi.parivahan.gov.in) வலைதளங்களுக்கு அல்லது அத்துடன் உள்ள ஆப்களுக்கு செல்லவும். அங்குள்ள ‘Update Mobile Number’ என்ற தேர்வை கிளிக் செய்து, உங்கள் வாகன பதிவு எண், சேசிஸ் எண், இன்ஜின் எண், பதிவு தேதி, அல்லது ஃபிட்னஸ் தேதியை உள்ளிடுங்கள்.

பின், தரப்பட்டுள்ள Captcha-ஐ நிரப்பி ‘Validate’ செய்யவும். அப்போது உங்கள் வலைதளத்தில் உள்ள லைசன்ஸ் எண், மொபைல் எண் மற்றும் வரும் OTP-ஐ சரியாக மனதில் நிரப்பி அப்டேட் செய்யலாம்.

இனையதளத்திலும் ஆப் வாயிலும் முடியாவிட்டால், அருகிலுள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நேரில் சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.

Related News

Latest News