ரயிலில் மிடில் பெர்த்தில் தூங்க புதிய விதி : பயணிகளே நோட் பண்ணுங்க!

இந்திய ரெயில்வேயில் பயணிகள் தூங்கும் வசதியை பயன்படுத்தும் போது சில சிக்கல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, 3-அடுக்கு படுக்கை வசதி கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் நடுப்படுக்கை (மிடில் பெர்த்) பயன்படுத்தும் போது பயணிகளுக்கு இடையே குழப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பொதுவாக, மேல் படுக்கையை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கீழ் படுக்கை மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்கப்படுகிறது. ஆனால் நடுப்படுக்கையை எல்லா வகை பயணிகளும் பயன்படுத்துவதால், குறிப்பாக தூங்கும் நேரத்தைச் சுற்றி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்க்க, Indian Railways முன்பே சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, நடுப்படுக்கையை முன்பதிவு செய்த பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அதை தூங்க பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நேரத்திற்கு வெளியே, அவர்கள் நடுப்படுக்கையை மடக்கி வைத்து, கீழ் இருக்கையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவும். ஆனால் இந்த விதிகளில் சில விதிவிலக்குகளும் உள்ளன.

நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தால், டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்று கூடுதல் நேரம் தூங்கலாம். மேலும், கீழ் படுக்கையில் இருப்பவரின் ஒப்புதல் இருந்தால், நடுப்படுக்கையை பயன்படுத்தும் நேரத்தை நீட்டிக்கவும் முடியும்.

மேல் படுக்கையை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேர வரம்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், நடுப்படுக்கை பயணிகள் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பயணிகள் தங்களது வசதிக்காக விதிகளை மீறாமல், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் பயணம் செய்ய வேண்டும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து தீர்வு பெறலாம்.

இந்த விதிமுறைகள் குறித்து தென்கால் ரெயில்வே தனது சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயணிகள் சீரான மற்றும் அமைதியான பயணத்தை அனுபவிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News