சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் – புதுச்சேரி – கடலூர் வரை 179 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சர்வே முடிந்த பிறகு 1599 கோடி செலவில் திட்டம் அமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் வசிப்பவர்கள் ரயில்கள் மூலம் செல்வது கனவாகவே இருந்து வருகிறது. பறக்கு ரயிலில் ஏறி, சென்ட்ரல் வந்து தான் அதன்பிறகே சென்னையில் இருந்து வெளியூர் செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.
அதேநேரம் சென்னை- மாமல்லபுரம் – புதுச்சேரி – கடலூர் வரை 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கடந்த 2007-ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது. ஆனால் அப்போதே நிலத்தின் மதிப்பு சென்னையில் எங்குமே இல்லாத அளவிற்கு உயர்ந்தது. கடந்த 15 வருடங்களில் அந்த நிலத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது.