தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அதிகாரப்பூர்வமாக இந்திய வனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியான தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்த நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.
அதாவது, வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும். மேலும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியில் நோக்கி நகரக்கூடும் என்பது தெரியும்.
