Friday, December 26, 2025

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

வாக்​காளர்​கள் வசதிக்​காக இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதள​மான https://voters.eci.gov.in -ல் எஸ்​ஐஆர் படிவத்தை ஆன்​லைனில் நிரப்​புவதற்​கான வசதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வாக்​காளர்​கள் தங்​களது பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண் அல்​லது வாக்​காளர் அடை​யாள அட்டை எண்ணை பயன்​படுத்தி இணை​யதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்​யப்​பட்ட செல்​போன் எண்​ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்​சொல்லை உள்​ளீடு செய்ய வேண்​டும்.

வாக்​காளர் பட்​டியல் மற்​றும் ஆதார் பதிவு​களில் பெயர் பொருந்தி உள்ள வாக்​காளர்​கள் இந்த வசதி​யைப் பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறார்​கள்.

Related News

Latest News