Gpay பயன்படுத்துவோருக்கு புதிய வசதி.. இனி ஆதார் மட்டும் போதும்…!

376
Advertisement

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வழியாக ஆதாரைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வசதியை கூகுள் பே (Google Pay) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக, ஆதார் அடிப்படையிலான UPI மூலம் Google Pay பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின் நம்பரை உருவாக்க முடியும். இந்த வசதியின் மூலம் இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி கூகுள் பே செயலியில் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். விரைவில் மற்ற வங்கிகளும் இச்சேவையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் வழியாக UPI வசதியை இணைக்க விரும்பும் பயனர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர் ஒன்றாக இருப்பதையும், அவர்களின் வங்கிக் கணக்கு ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.

அவர்கள் இதைச் செய்தவுடன் கீழே உள்ள படிகளைப் பயன்படுத்தி ஆன்போர்டிங் செய்யலாம்.Google Pay செயலியில் பயனர்கள் டெபிட் கார்டு அல்லது ஆதார் அடிப்படையிலான UPI ஆன்போர்டிங்கில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தரவுகளின்படி, இந்தியாவில் வயது வந்தோரில் 99.9 சதவீதத்துக்கு அதிகமானோர் ஆதார் எண்ணைக் கொண்டுள்ளனர்.

மேலும் மாதத்திற்கு ஒரு முறையாவது அதைப் பயன்படுத்துகின்றனர். UPI முறையில் ஆதார் அடிப்படையிலான ஆன்போர்டிங் வசதி, அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு கிடைக்கச் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.