இந்திய ரயில்வே, பயணிகளுக்கான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது , குறிப்பாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியமான சேவைகள் வழங்குவதில் முன்னேற்றம் எடுத்து உள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், ரயில்களில் உள்ள லோயர் பெர்த்கள் குறிப்பிட்ட பயணிகளுக்கு முன்னுரிமையாக ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் மூலம், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.
பெண்களுக்கான லோயர் பெர்த் வசதி முன்பதிவு செய்யும் போது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட லோயர் பெர்தைத் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் இடங்களின் அடிப்படையில் கீழ் பெர்த்களைப் பெற முடியும். இந்த புதிய விதிமுறையின் படி, இனிமேல் ரயில்களில் உள்ள லோயர் பெர்த்கள் காலியாக இருந்தால், அவை மட்டும் மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இது ரயில்வேயின் தானியங்கி முறையில் செயல்படுகிறது. ஸ்லீப்பர் வகுப்பின் ஒவ்வொரு பெட்டியிலும் 6 முதல் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், AC-3 ஆம் வகுப்பில் 4 முதல் 5 இடங்களும் மற்றும் AC-2 ஆம் வகுப்பில் 3 முதல் 4 லோயர் பெர்த்களும் சிறப்பு தேவைகள் உள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வசதி ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். பயணிகளுக்கு அதிகபட்சம் பயனுள்ளதாக இந்த ஒதுக்கீடு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் உள்ள பயணிகளுக்கு உயர் தரமான சேவைகளை வழங்க மத்திய ரயில்வே, அமிர்த் பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில்களில் AC வசதிகள் இல்லை, ஆனால் 12 ஸ்லீப்பர் வகுப்புகள் மற்றும் 8 பொதுப் பெட்டிகள் உள்ளன. இந்த ரயில்களில் நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன, மேலும் குறைந்த கட்டணத்தில் பயணிகள் நல்ல அனுபவம் பெற முடியும்.
இந்த புதிய முயற்சிகள் ரயில்வேயின் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்களும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகப்பிரிவுகளும் பயனடைவார்கள். இதன் மூலம் ரயில்வே புதிய மாற்றங்களைச் செய்து, தன்னுடைய சேவைகளின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறதது.