தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கட்சி தொடங்கியதிலிருந்தே, விஜய் அறிமுகப்படுத்திய கொடியை ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் தொடருகின்றன. ஆரம்பத்தில், யானை சின்னம் தொடர்பாக ‘பகுஜன் சமாஜ்’ கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. இப்போது, கொடியின் நிறங்கள் தொடர்பாகவே புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவனர் பச்சையப்பன், “எங்கள் அமைப்பை பதிவு செய்த நிறங்களையே தவெக கட்சி தங்களது கொடியில் பயன்படுத்தியது” எனக் குற்றம்சாட்டி, “சிவப்பு-மஞ்சள்-சிவப்பு” நிறங்களைப் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தற்போது, நிறங்கள் மற்றும் சின்னம் என இரு பிரிவிலும் வழக்குகள் தொடர, இந்தச் சிக்கலை விஜய் எப்படிக் சமாளிக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாகியுள்ளது.