பல நாட்கள் பதற்றம் , உக்ரைன் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் காதுகளில், ஏதோ படத்தில் வருவது போல குண்டு விழும் சத்தம் மற்றும் மக்கள் அலறல் ஒருபுறம் இவைகளை கேட்டு தான் பலரும் கண் விழித்தனர் கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று.
ஆம் , உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா . உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த தாக்குதல். சூழலை சுதாரித்துக்கொண்ட மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றத் தொடங்கியது.
படங்களில் மட்டுமே “போரை” பாத்துவந்த பல தலைமுறை,ஒரு போரில் நம்மையே இழப்போம் என கனவில் கூட நினைத்துருக்க மாட்டார்கள் .ஏன் போரில் உறவுகளை இழப்போம் எனவும் கூட என்னிருக்க மாற்றார்கள். ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைன் உலக நாடுகள் உதவியை நாடியது. போரின் பதற்றம் இன்று வரை குறையாத நிலையில் அங்கு மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.
தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்கும் இளம் தலைமுறைகள் மத்தியில் இவ்வுலகில், உக்ரைன் மண்ணில் போர் களத்தில் கடந்த 9 நாட்களில் மட்டுமே , எதிர்காலத்தில் தங்கள் தாய் நாட்டை காக்க பிறந்தது போல , 390 குழந்தைகள் பிறந்துவுள்ளது. இதில் 199 ஆண் குழந்தைகள் மற்றும் 191 பெண் குழந்தைகள் ஆகும்.
பாதுகாப்பு முகாம்கள் , மெட்ரோ சுரங்கங்கள் போன்ற இடங்களில் மக்கள் தஞ்சம் அடைந்துவுள்ள நிலையில் சரியான பராமரிப்பு சூழல் இல்லாத நிலையிலும் குழந்தைகளை பாதுகாத்து வருகின்றனர் உக்ரைன் தாய்மார்கள்.
நாட்டில், சொந்தங்களாக இல்லாதவர்கள் கூட தற்போது ஒரே குடும்பமாக ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகின்றனர்.உலக நாடுகள் உடனே இந்த போரை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர்கள் குடும்பத்தில் ஒருவராக உலக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.