நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகி இருக்கிறது. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி டியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் படம் ஆரம்பித்ததில் இருந்தே இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற பேச்சு தொடர்ந்து இருக்கிறது. பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா, காஜல் மற்றும் ஸ்ரீலீலா ஒன்றாக சேர்ந்து நடனமாடுவது போல் ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த தளபதி கச்சேரி பாடலில் விஜய், பூஜா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடனமாடுகிறார்கள்.
ஸ்ரீலீலா கழுத்தில் அணிந்திருந்த செயின் போலவே மமிதா பைஜூ இப்படத்தில் அணிந்துள்ளார். இப்படி பல விஷயங்கள் ஒத்துப் போவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சிலர் இதனை ட்ரோல் செய்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் ஜனவரி 9ஆம் தேதி தளபதி ரசிகர்களால் திரையரங்குகள் திருவிழா கோலத்தில் தெறிக்கப்போவது உறுதி.
