Wednesday, December 17, 2025

வாரிசு படத்துல குஷ்பு எங்கடா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தருகிறது.

படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்க, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷியாம், யோகி பாபு, VTV கணேஷ், எஸ்.ஜே.சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில் குஷ்பு நடித்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு, கிணத்த காணோம் வடிவேலு பாணியில், படத்தில இருந்த குஷ்புவ காணோம் என சமூகவலைதளங்களில் நகைச்சுவையான பதிவுகளை பரவலாக பார்க்க முடிகிறது.

வாரிசு BTS ஸ்டில்ஸ் ரிலீஸ் ஆன போது கூட குஷ்பு, விஜய் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், படத்தில் குஷ்பு வராதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related News

Latest News