நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பிரதமரை தொடர்ந்து நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.