நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.
நேற்று (புதன் கிழமை ) இரவுடன் காலக்கெடு முடிந்த பிறகும் முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதாகக் நேபாள அரசு அறிவித்துள்ளது.