Saturday, April 19, 2025

வெளிச்சத்திற்கு வரும் இருட்டுக்கடை நாடகம் ! ‘திருமணம் மீறிய தொடர்பு’, யார் தான் குற்றவாளி?

கடந்த பிப்ரவரி மாதத்தில்தான், உலகப் புகழ்பெற்ற “இருட்டுக்கடை அல்வா” குழுமத்தின் வாரிசு பெண்ணான கனிஷ்காவிற்கு திருமணம் நடைபெற்றது. அந்த கல்யாணம் ஊரே திரும்பிப் பார்ப்பதற்கும், சோசியல் மீடியாவில் பேசப்படுவதற்கும் ஏற்ற வகையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால் அந்த திருமணம், இப்போது பெரிய சர்ச்சையாய்க்க மாறியுள்ளது.

திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் “இருட்டுக்கடை”யை தங்களது பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று மனைவியை மிரட்டினதாகவும், திருமணத்திற்கு முன் இருந்த பழைய உறவை மறைத்துப் பொய் கூறி கல்யாணம் செய்ததாகவும் கனிஷ்கா தனது புகாரில் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகும், அந்த பழைய பெண்ணை வீட்டுக்கே அழைத்து வந்து வாழ்ந்ததாகவும், இதை கண்டித்ததற்காக தினமும் சண்டை, அடிதடி, மற்றும் மன அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கணவர் பல்ராம் சிங், “இந்த தொழிலை என் பெயருக்கு மாற்றி எழுதாவிட்டால், வேறு பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன்” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் தாங்க முடியாமல், கனிஷ்கா கடந்த மார்ச் 15ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகும், கணவர் மற்றும் அவரது மாமனார் நேரடியாக வந்து, “நல்லா வாழணும்னா, உங்கள் தொழிலை முழுமையாக எங்களுக்கே எழுதிக்கொடுக்கணும்” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், “உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது. நான் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவன்” என்று கணவர் தன்னம்பிக்கையுடன் பயமுறுத்தியதாகவும், “என்னோட அடிமை மாதிரி நடந்தேனும், ஏதாவது செய்யலன்னா நான் சூசைடு பண்ணிருவேன், கார் வேணும், தொழில் வேணும்” என நெருக்கடி கொடுத்ததாகவும் கனிஷ்கா புகார் அளித்துள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பெண்ணை அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே அனுப்பி, சுயநலத்தோடு நடந்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், எல்லாவற்றையும் முற்றிலும் மறுத்து, “நாங்கள் ஒரு ரூபாய்கூட வரதட்சணை வாங்கவில்லை. நாங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண்ணை விருப்பப்பட்டோம், ஆனா அது தவறாக மாறிவிட்டது. அவங்கதான் நன்றாக நடக்கலை. நள்ளிரவிலும் வீட்டை விட்டு வெளியே செல்கிறாங்க. குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் இல்லாம, ஸ்டைல் வாழ்க்கையே முக்கியம்” என்று கூறியிருக்கிறார்கள்.

அதோடு, “Defender கார் வரதட்சணையாக கேட்டது முழுமையாக பொய். ஏப்ரல் மாதத்திலேயே, திருமணத்துக்கு முன்பு நாங்களே பணம் செலுத்தி அந்த காரை புக் பண்ணினோம். அவர்களது கோரிக்கையால் தான் அந்தக் காரை மருமகளின் பெயருக்கு மாற்றினோம். ஆனால் லோன் மட்டும் நாங்கள் தான் கட்டுகிறோம். இது எப்படி வரதட்சணை?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாமனார் யுவராஜ் சிங் கூறுவதாவது, “நாங்கள் நான்கு தலைமுறைகளாக ஏற்றுமதி தொழிலில் இருக்கிறோம். ஏழு கோயில்கள் கட்டியுள்ளோம். பணம் இல்லாததால் திருமணம் செய்தோம் என யாரும் சொல்ல முடியாது. அந்த கடை அவர்களுக்கு எப்போது வந்தது தெரியுமா? என் மகனிடம் நிச்சயதார்த்தம் பேசி முடித்த பிறகுதான் அவர்களுக்கு அந்த கடை கிடைத்தது” என தெரிவிக்கிறார்.

அதேவேளை, “இருட்டுக்கடை” சொத்து உரிமையைப் பற்றியும் சந்தேகம் எழுந்திருக்கிறது. முன்னாள் உரிமையாளர்கள் மரணித்த பிறகே, இந்த கடை கவிதா சிங் கைக்கு வந்தது. GST ஆபீஸில் கூட இந்த சொத்து தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படி இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை வீசியும், தங்களை தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் என கூறியும் மீடியா முன்னிலையில் வாதாடி வருகின்றனர்.

இது வெறும் குடும்ப பிரச்சனையா? அல்லது பாரம்பரிய தொழிலை கைப்பற்ற திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சியா?

உண்மை என்ன என்பதை சட்டவழியில், போலீஸ் விசாரணையில் தெளிவாக தெரியவரும் .

Latest news