Saturday, September 6, 2025

நெல்லையில் பாஜக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தேர்தல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய மாவட்ட தலைவர் நாளை மறுதினம் தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்தல் நடத்தாமல், கருத்து கேட்பு மற்றும் மாநில நிர்வாகிகள் முடிவின்படி தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தற்போதைய மாவட்ட தலைவர் தயா சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் இருவரும் தங்களது பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தங்களது சமூக வலைதள பக்கத்தில், “பாஜக கட்சியில் அரசியல் பயணம் நிறைவடைகிறது, என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி” என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News