Sunday, April 27, 2025

‘global fire power’ டாப் ல இந்தியா! நொறுங்கப் போகும் பாகிஸ்தான்! யாரு கெத்து ?

இந்தியா மற்றும் பாகிஸ்தான்… இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக எதிரிகளைப் போலவே இருக்கின்றன. சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இரு நாடுகளும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்து வருகின்றன. இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகி, பாகிஸ்தானுக்கு விசா அனுமதிகளை நிறுத்தியுள்ளது. பதிலடி காட்ட பாகிஸ்தானும், சிம்லா ஒப்பந்தத்தை கிழித்து விட்டு இந்திய விமானங்களுக்கு தங்களின் வான்வெளியை முடக்கியுள்ளது. இந்நிலையில், யாருடைய ராணுவ பலம் அதிகம்? முப்படையிலும் யார் மேலோங்குகின்றனர் என்பதை ஒரு நுணுக்கமான ஒப்பீட்டுடன் பார்க்கலாம்.

உலகளவில் ராணுவ திறனுக்கான தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 12வது இடத்தில் தான். இந்த தரவரிசை “குளோபல் ஃபயர்பவர்” எனப்படும் ஒரு ரேட்டிங் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் மதிப்பெண் குறைவாக இருந்தால் அந்த ராணுவம் அதிக திறன் வாய்ந்தது என அர்த்தம். அதன் படி பார்த்தால் இந்தியா 0.1184 எனும் மதிப்பெண் பெற்றுள்ளது, பாகிஸ்தான் இதில் 0.2513 என்ற மதிப்பெண்ணைப் பெற்றிருக்கிறது.

மொத்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது, இந்தியாவிடம் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இருக்கின்றனர். அதில் 14.5 லட்சம் செயலில் உள்ள வீரர்கள் இருக்கிறார்கள், மீதம் 25 லட்சம் துணை ராணுவ வீரர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தான் மொத்தம் 17 லட்சம் வீரர்களை மட்டுமே வைத்திருக்கிறது. இதில் செயலில் உள்ளவர்கள் 6.5 லட்சம் பேர் மட்டும் தான் .

விமானப்படை கணக்கை எடுத்துக் கொண்டால், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 3 லட்சம் விமானப்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் அந்த எண்ணிக்கை 78,000 மட்டுமே. இந்தியா 2229 விமானங்களை வைத்திருக்கிறது, அதில் போர் விமானங்கள் மட்டும் 513 … பாகிஸ்தான் 1399 விமானங்களை வைத்திருப்பதுடன், அதன் போர் விமான எண்ணிக்கை 328 மட்டும் தான் … ஹெலிகாப்டர்களிலும் இந்தியா தான் முன்னிலையில் இருக்கின்றது – இந்தியாவிடம் மொத்தம் 899 ஹெலிகாப்டர்கள் இருக்கிறது , அதில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்…. ஆனால் பாகிஸ்தானிடம் 373 ஹெலிகாப்டர்கள் தான் இருக்கிறது, அதில் 57 தான் தாக்குதல் வகை ஹெலிகாப்டர்கள்.

அதைப் போலவே கடற்படையிலும் இந்தியா ஒரு பெரும் நிலையை வகிக்கிறது . இந்தியாவில் மொத்தம் 1.42 லட்சம் கடற்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் அது 1.24 லட்சம் மட்டும் தான். இந்தியா இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை வைத்திருக்கிறது – இது ஒரு பெரிய பலம். அதோடு 13 navy destroyer என்னும் அழிப்பான்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள், 135 ரோந்து கப்பல்கள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானின் கடற்படையில் இந்த அளவுக்கு எந்த வசதிகளும் இல்லை.

பீரங்கிகள் , ராக்கெட் அமைப்புகள், ராணுவ டாங்கிகள் என இந்தியாவிடம் பெரும் படை உள்ளது. இந்தியாவிடம் 4200 டாங்கிகள், 1.4 லட்சம் வாகனங்கள், 100 சுயமாய் இயங்கும் பீரங்கிகள், 260 ராக்கெட் பீரங்கிகள் இருக்கின்றன. பாகிஸ்தானின் பீரங்கி எண்ணிக்கைகள் சில இடங்களில் அதிகமாக இருந்தாலும், மொத்த முப்படை இணைந்த அளவில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது.

இந்த தரவுகள் மட்டும் பார்த்தாலும், இந்தியாவின் ராணுவம் முப்படையிலும் மிக வலிமையானது. ஆனால், ஒரு போர் வெறும் எண்ணிக்கையால் முடிவுக்கு வருவதில்லை. உள்துறை நிலைமை, பொது மக்கள் ஆதரவு, அரசியல் நிலைத்தன்மை, வெளிநாட்டு உறவுகள் – எல்லாமே முக்கியம்.

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது…

Latest news