Thursday, December 26, 2024

நயன்தாரா – விக்னேஷ்சிவன் முதலாமாண்டு திருமண நாள்! அழகிய பதிவுடன் வெளியான புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பதாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று இருவரும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.இது குறித்து விக்னேஷ் சிவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று தான் திருமணம் முடிந்தது.

திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர். லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

இந்த பயணிக்க வெகுதூரம் உள்ளது..! ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..! நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் வரும் என பதிவிட்டுள்ளார்.

இத்துடன் நயன்தாரா இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியுள்ள அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Latest news