Wednesday, December 17, 2025

ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு சம்பவம் : ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

ஆஸ்திரேலியாவில், சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் (ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7.47) இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் 24 வயதான நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபரின் ஓட்டுநர் உரிமைத்தை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related News

Latest News