முகத்துல திட்டு திட்டா இருக்கா? இதோ இருக்கே இயற்கை நிவாரணி!

157
Advertisement

சருமம், முடி, மற்றும் கண் விழிகளுக்கு நிறத்தை அளிக்க காரணமாக அமையும் இயற்கையான நிறமி தான் மெலனின் (melanin). நிறத்தை அதிகரிக்கும் இந்த மெலனின்  அதிகமாக சுரப்பதால் முகத்தில் ஆங்காங்கே கருப்பாக திட்டுகள் தெரிய தொடங்கும்.

இவ்வாறான சூழல் ஏற்பட அதிகப்படியான வெயில், ஹார்மோன் குறைபாடு, வயது மூப்பு, உள்தசை வீக்கம் மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. பப்பாளி, எலுமிச்சை சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து, pigmentation இருக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக தடவி வர சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

வறண்ட சருமம் உடையவர்கள், இதே கலவையுடன் பாதாம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது. மேலும் பப்பாளியுடன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தேன் சேர்த்து scrub போல உபயோகித்து வர சருமத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றுவதால், pigmentation மற்றும் அதனால் ஏற்படும் வடுக்கள் படிப்படியாக குறையும் என இயற்கை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.