மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யோகேஷ் ஷீர்சாகர் இன்று(நவ. 16) மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மகாராஷ்டிரத்தின் பீட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேசியவாத காங்கிரஸின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்த யோகேஷ் ஷீர்சாகர், தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, தான் சார்ந்திருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், அவர் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
