Wednesday, January 15, 2025

2022ன் முதல் சூரிய உதயத்தை வெளியிட்ட நாசா…

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தில் வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுசெய்து வருகின்றனர். அவர்களுக்கு ராக்கெட் மூலம் உணவு சப்ளை செய்து உபேர் ஈட்ஸ் நிறுவனம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. விண்வெளி வீரர் ஒருவர் மற்றொரு வீரரின் தலைமுடியை வெட்டி அழகுபடுத்திய செயலும் விண்வெளியில் நடந்து வியக்க வைத்தது.

தற்போது விண்வெளி வீரர்கள் இந்த ஆண்டின் தொடக்க நாளில் சூரிய உதயத்தைப் படம்பிடித்து ட்டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள குழுவினர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி காலை 12 மணிக்கே சூரிய உதயத்தைப் பார்த்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வுமையம் பூமியிலிருந்து 354 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவருகிறது. விண்கலம் ஒவ்வொரு 92 நிமிடங்களுக்கு ஒருமுறையும் பூமியைச் சுற்றி வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு 27,700 கிலோ மீட்டர் வேகத்தில் இது பயணிக்கும்.
விண்வெளி மையத்தில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொரு நாளும் 15 முதல் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை படமெடுத்துப் பதிவிட்டுள்ளது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

Latest news