தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுக்கு ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதிகளில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்கள் பட்டியலையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
அதன்படி, ஈரோடு மேற்கு தொகுதியில் எம்.யுவராஜா, ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், ஒட்டன்சத்திரத்தில் விடியல் சேகர், கும்பகோணத்தில் எம்.கே.ஆர்.அசோக்குமார், கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
