Monday, December 29, 2025

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பாஜக எம்எல்ஏவும், பாஜக சட்டப்பேரவை குழு தலைவருமான நயினார் நாகேந்திரனை தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதையடுத்து தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related News

Latest News