பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தம் அடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ‘வெற்றிவேல் வீரவேல்’ எனும் ஆபரேஷனை தொடங்குவோம் என அவர் கூறியுள்ளார்.