Monday, February 16, 2026

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை. நானும் அவ்வாறு பேசியதில்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. அது குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் என்னிடம் பேசினார்.

நேற்று முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்குச் சென்றபோது இந்த விவகாரம் குறித்து பேசினார். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

Related News

Latest News