வரலாற்றை படித்தவர் கமல் – கமலுக்கு சீமான் ஆதரவு

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் மீதான தடையை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உய்ரநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உண்ர்வுகளை புண்படுத்த கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் : “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ?, தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வரலாற்றை படித்தவர் கமல். சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும். KGF, காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடின.

கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை என சீமான் கூறியுள்ளார்.

Related News

Latest News