அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயர் இல்லாத கண்டித்து, தமிழ்நாடு என்ற பெயரை பேருந்துகளில் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பேருந்துகளில் இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்பது கடந்த சில நாட்களாக தமிழ்நாடு என்பதை நீக்கி அரசு பேருந்து என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்று ஸ்டிக்கர் ஒட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில், அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை ஸ்டிக்கர் ஒட்ட விடாமல் தடுத்ததால் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
