சீர்காழி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற செயலாளர் ஜவகர் நெடுஞ்செழியன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக கூறிய அக்கட்சியனர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.