Thursday, September 4, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்

CSK அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக தொழிலதிபரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான என்.சீனிவாசனும், அவரது மகள் ரூபா குருநாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருகிற 27ம் தேதி நடைபெறும் இந்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் முறைப்படி பொறுப்பு ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான என்.சீனிவாசன் மீண்டும் விளையாட்டு நிர்வாகத்துக்கு திரும்புவதை வரவேற்பதாக CSK தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News