சென்னை செம்மஞ்சேரியில் கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு ஆட்டோவை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி காவல் நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விஸ்வநாதன் என்பவர் ஆட்டோ ஓட்டு வருகிறார். இவர் நேற்று செம்மஞ்சேரி காவல் நிலையத்தின் பின்புறத்தில் உள்ள தனது வீட்டு முன் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. அவரது வீட்டு முன் இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைபற்றி குற்றவாளியை தேடி வருகின்றனர்.