Sunday, December 28, 2025

லோகேஷை முத்தமிட்டு லியோ ஷூட்டிங்கில் விடைபெற்ற மிஷ்கின்! வைரலாகும் கடிதம்

‘லியோ’ திரைப்படத்தை பற்றிய தகவல்கள் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் பரபரப்பாக அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

தான் நடிக்க வேண்டிய பகுதிகளை நடித்து முடித்துள்ள மிஷ்கின் காஷ்மீரில் இருந்து திரும்பிய கையோடு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


மைனஸ் 12 டிகிரியில் பணியாற்றியதாகவும் உதவி இயக்குனர்களின் அன்பு தன்னை ஆச்சர்யபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் லலித் குமார் சக தொழிலாளியாக வேலை பார்த்ததாக கூறியுள்ள மிஷ்கின், அன்பாகவும் கண்டிப்பாகவும் போர்வீரனை போல லோகேஷ் இயங்கி கொண்டிருந்ததாக பாராட்டியுள்ளார்.

லோகேஷை முத்தமிட்டு ஆரத்தழுவி விடைபெற்றதாக எழுதியுள்ள மிஷ்கின், விஜயின் அன்பையும் பண்பையும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அற்புதமான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக மிஷ்கின் தெரிவித்திருப்பதால், படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.  

Related News

Latest News