Wednesday, January 7, 2026

கைதிகளுக்கு பொது மன்னிப்பு., மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை

மியான்மரில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறையில் உள்ள 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் 52 பேர் வெளிநாட்டு குடிமக்கள் ஆவர்.

கொலை, பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்ற கைதிகளின் தண்டனை காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையிலும், மக்களின் மனங்களையும் இதயங்களையும் அமைதிப்படுத்தும் நோக்கத்துடனும், மனிதநேயத்தை மதிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News