மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன.
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.