மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் இஸ்லாமியர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன.