Wednesday, May 21, 2025

தமிழ்நாட்டில் பரவும் உருமாறிய கொரோனா! இந்தியாவில் கொரோனா மரணங்கள்! மும்பையில் நடந்தது என்ன?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா பாதிப்பு அனைவரையும் புரட்டிபோட்டு அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நாம் மீண்டெழுந்து இருந்தாலும் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து நாம் இன்னும் முற்றிலுமாக மீளவில்லை.

இந்நிலையில் சமீபத்தைய நிலவரப்படி, இந்தியாவில் 257 Active ஆக உள்ள கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருப்பதோடு மும்பை, கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறிய அளவில் புதிய கொரோனா தோற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, அதீத உடற்சோர்வு, தலைவலி, சுவை அல்லது மணம் உணராத தன்மை, மனச்சோர்வு, கண்னெரிச்சல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை இந்த உருமாற்றம் அடைத்த கொரோனாவின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டமான இடங்களில் மற்றும் காற்றோட்டம் குறைவான இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுவது அல்லது சானிடைசர் பயன்படுத்துவது, காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டில் தங்கி பிறருடன் தொடர்பைத் தவிர்ப்பது, காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது போன்றவற்றை செய்வது பாதுகாப்பாக இருக்கும்.

இந்த நிலையில் மும்பையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 14 வயது சிறுமி மற்றும் 59 வயது பெண்ணுக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Latest news