Tuesday, December 30, 2025

முருங்கைக் கீரையின் முத்தான மருத்துவ பயன்கள்!

சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரும் முருங்கை மரத்தின் கீரையை உட்கொள்வதால் முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு பொதுவான உடல்நலனும் மேம்படுகிறது. முருங்கை கீரையால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைகிறது.

முருங்கைக்கீரை உடலுக்கு தேவையான சிங்க் சத்தை தருவதுடன் ரத்த சக்கரை அளவுகளை சீராக்கி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் கிருமிநாசினி தன்மையை கொண்ட முருங்கை கீரை ஆரோக்கியமான சருமத்திற்கு வழி வகுக்கிறது.

உடலுக்கு தேவையான விட்டமின்களை கொடுத்து ஊட்டமளிக்கும் முருங்கை கீரை தூக்கமின்மைக்கும் தீர்வாக அமைகிறது. வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரண கோளாறால் அவதிப்படுவோரும் முருங்கைக் கீரையை அளவாக எடுத்துக் கொள்ளும் போது சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related News

Latest News