மும்பை, காட்கோபர் பகுதியில் பாஜக எம்எல்ஏ பராக் ஷா என்பவர், ஆட்டோ ஓட்டுநரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆட்டோ ஓட்டுநர் தவறான திசையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக எம்எல்ஏ தவறான திசையில் ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை நிறுத்தி, வாக்குவாதத்தின் போது அவரை அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் இந்தச் செயலை விமர்சித்து, X இல் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். “பாஜக எம்எல்ஏக்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக மாறிவிட்டனர், ஏழை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதுதான் பாஜகவின் உண்மையான முகம் என விமர்சித்துள்ளார்.
