மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல் (MTNL) கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2025 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனம் ரூ.34,484 கோடி என்ற மொத்த கடன் சுமையுடன் செயல்பட்டு வருகிறது. இதில் அரசு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரூ. 8585 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை.
வங்கிகளுக்கு செலுத்தாத தொகைகள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – ரூ.3,733.22 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ரூ.2,434.13 கோடி
பேங்க் ஆஃப் இந்தியா – ரூ.1,121.09 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி – ரூ.474.66 கோடி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – ரூ.363.43 கோடி
யூகோ வங்கி – ரூ.273.58 கோடி
பஞ்சாப் & சிந்து வங்கி – ரூ.184.82 கோடி
ஜூலை 14ஆம் தேதியன்று அதன் பங்கு விலை ரூ. 52.12 என்ற அளவில் முடிவடைந்த நிலையில், இன்று ரூ. 52.15 என்ற அளவுக்கு சிறிது உயர்வுடன் திறக்கப்பட்டன. இருப்பினும், சந்தை திறந்த சிறிது நேரத்திலேயே அதன் பங்கு சரியத் தொடங்கியது.
MTNL போன்ற அரசு நிறுவனங்கள் கடன் நெருக்கடியில் இருந்து மீளும் வழிகள் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது.