விஜய் நடித்த படங்களை டிவியில் ஒளிபரப்பக் கூடாது – தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழகம் கட்சி இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் நடிகருமானவர் என்பதால், அவரது ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்சார் பிரச்சினையில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விஜய்யின் படங்களை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளர் செய்யது பாபு, இந்த கோரிக்கையை கடிதம் மூலம் முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related News

Latest News