விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது முதல் காட்சிகளான ரசிகர் மன்ற காட்சிகள் தான் மொத்த வசூலின் போக்கை தீர்மானிக்கின்றது.
ஆனால், அப்படிப்பட்ட காட்சிகளால் சாமானியனுக்கு ஏற்படும் நஷ்டங்களினால் தான் உச்சகட்ட லாபமே நிர்ணயிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
சுமாராக 300 சீட்டுகளை வைத்துள்ள ஒரு தியேட்டரில் 500 ரூபாய் டிக்கெட் விலை கொண்ட முதல் காட்சியில், 500 பேர் இருக்கும் பட்சத்தில் குறைந்தது ரெண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வசூலாகிவிடும். ஒரே நாளில் நான்கு காட்சிகள் திரையிடப்பட்டால் ஒரு நாளைக்குள்ளாக பத்து லட்சம் வருமானத்தை திரையரங்குகள் ஈட்டிவிடுகின்றன.
இதே போல, நான்கு நாட்களில் சாதாரணமாக நாற்பது லட்சம் லாபம் ஈட்டும் படங்களுக்கு, ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கும் டிக்கெட்டுகள் தான் காரணம்.
நியாயமான திரையரங்கு டிக்கெட் நூறில் இருந்து நூத்து இருபது ரூபாய் நிலையில் இருக்கும் போது ஐநூறு, ஆயிரம் என அவசர அவசரமாக ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதால் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் லாபம் அடைகின்றனர். எந்திரமயமான வாழ்க்கையில் படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகள் தேவை என்றாலும் அதற்காக அளவுக்கதிகமாக செலவு செய்கிறோமா என்பதை மக்கள் தெளிந்துணர்தல் அவசியம்.