ஆசைக்காக 5 வயது குழந்தையை தாயே கொன்ற அவலம்.. செல்போனில் கிடைத்த ஆதாரம்… மனைவியை காட்டிக்கொடுத்த கணவன்.. என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த தொகுப்பு!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெயிண்டர் வேலை செய்து வரும் சுரேஷ் (30) என்பவருக்கும் அவரது மனைவி பாரதி (25)க்கும் இரண்டு பெண் குழந்தைகளுடன், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது, பாரதி தனது குழந்தை மூச்சே இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்தபோது “புறையேறி விட்டதாகவும்” எனக் கூறிய பாரதியின் விளக்கம் சுரேஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சுரேஷ் உடனே குழந்தையை கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என உறுதி செய்தனர்.
இதற்குப் பிறகு தனது ஆசை ஆசையாய் வளர்த்த மகனை தன்னுடைய பிடிவாதத்தால் உடற்கூறாய்வு செய்ய விடாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார் சுரேஷ்.
அதன் பின்னர் சுரேஷ், வீட்டில் இருந்த பாரதியின் கைபேசியில் சுமித்ராவுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களை கேட்டபோது அதிர்ச்சியடைந்தார்.
அதாவது, பாரதிக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் சுமித்ரா (22) எனும் பெண்ணுக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்து வந்தது. இந்த நிலையில், பாரதி தனது மார்பில் ‘SUMI’ என காதலியின் பெயரை டேட்டூ போடவும் செய்திருந்தார்.
இதனை கண்டுபிடித்த கணவர் சுரேஷ், இருவரையும் பலமுறை எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் தகராறுகள் அடிக்கடி நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில், “நாம் இருவரும் தனியாக இருக்க உன் குழந்தை இடையூறாக இருக்கிறது, அவனை கொன்று விடு” என சுமித்ரா கூறியிருக்கிறார்.
இதன் காரணமாகபாரதி, “குழந்தையை வாயை பொத்தி கொன்றுவிட்டேன்” என்று வாட்ஸ்அப்பில் பதில் அனுப்பி, குழந்தையின் இறந்த புகைப்படத்தையும் அனுப்பியிருந்தது.
இது அனைத்தும் வீட்டில் இருந்த செல்போனில் இருந்துள்ளது. இவை சுரேஷுக்கு தெரிய வந்ததும் பாரதி வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். பின்னர் சுரேஷ் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பாரதி மற்றும் சுமித்ரா இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யும் பணிகள் நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஓரினச்சேர்க்கை காரணமாக 5 மாத குழந்தையை தாய் கொன்றது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
