கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்தநிலையில், சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிபள்ளம் காமராஜர் தெருவில் அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, பக்கத்துவீட்டு சுவர் இடிந்து இவர்களின் கூரை வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதில், வீட்டில் இருந்த தாய் அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் சடலத்தையும் மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பக்கத்துவீட்டு சுவர் இடிந்த விபத்தில் தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
