சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட முதல் வீரர் என்ற அதிரடி சாதனையை இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா படைத்துள்ளார்.
ஆசியகோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி அசத்தி கொண்டிருக்கும் அபிஷேக் சர்மா, 331 பந்துகளில் 50 சிக்ஸர்களை பறக்க விட்டு, குறைந்த பந்துகளில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட முதல் வீரர் என்ற அதிரடி சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் எவின் லூயிஸ் 366 பந்துகளில் 50 சிக்ஸர் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், 510 பந்துகளில் 50 சிக்ஸர்கள் அடித்து SKY 5வது இடத்தில் உள்ளார்.