Sunday, July 20, 2025

2024ல் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு இதுதான்..!!

இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் ஸ்விக்கி நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கிய உணவுகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ஸ்விக்கி செயலி மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவுகள் பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு 12 மணி முதல் 2 மணிவரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களால் அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளில் சிக்கன் பர்கர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news