அமெரிக்காவிற்குள் அபாயகரமாக கிருமியை கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.  இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.

அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் கிருமியை கடத்திய 2 பேரை கைது செய்த அமெரிக்க அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

அப்போது இந்த நோய்க்கிருமி மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய FBI  இயக்குனர் காஷ் பட்டேல்,  இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள யுன்கிங் ஜியான் என்ற நபர், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். எனவும், அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்களும் உள்ளதாக கூறினார்.

Related News

Latest News