தற்போது ஆராய்ச்சியில் பல விதமான புது புது உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையை வைத்து கொசுக்கள் நம்மைக் கண்டுபிடித்து இரத்தத்தை உறிஞ்சும் என்று தெரியவந்துள்ளது.
பொதுவாகக் குளிக்காமல் இருப்பதால் தான் கொசு நம்மை அதிகமாகத் தாக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் அது தவறு, journal I Science என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது, அதில் 5 நபர்கள் வெவ்வேறு விதமான சோப்புகளைப் பயன்படுத்திக் குளித்துள்ளார்கள். அப்போது அந்த நபர்களின் சோப் வாசனையால் கொசுக்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டது தெரியவந்தது.
அதற்குக் காரணம் மனிதர்களின் இரத்தம் கிடைக்காத நேரத்தில், கொசுக்கள் மலரின் வாசனையை வைத்து அதன் தேனை உறிஞ்சி பசியை போக்கிக் கொள்ளும், இதனால் சோப்பின் நறுமண வாசனையை வைத்து கொசுக்களால் மனிதர்களைக் கண்டுபிடிக்க முடியும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அவர்கள் பயன்படுத்திய ஸ்சோப்களில் limonene என்ற கொசு விரட்டி ரசாயனம் சேர்ந்து தயாரிக்கப்பட்டு இருந்து இப்பிரச்சனை ஏற்படுகிறது, மேலும் தேங்காய் எண்ணெய் ஸ்சோப் மற்றும் vanilla வாசனை கொண்ட சோப்புகளைப் பயன்படுத்தினால்.
கொசுக்கள் அருகில் வராது என்று சொல்லப்படுகிறது, அதற்கு காரணம் அறிவியல் ரீதியாக பார்த்தால் தேங்காய் எண்ணெய் இயற்கை கொசு விரட்டியாகப் பார்க்கப்படுகிறது.