கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று படிப்படியாக வீரியம் பெற்று இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ’மோந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பெயரை சூட்டியது, தாய்லாந்து நாடு ஆகும். ‘மோந்தா’ என்பது பெண் பெயரை குறிப்பிடுகிறது. ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என்று அர்த்தம் தருகிறது.
மோந்தா புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்து வரும் புயலுக்கு ‘சென்யார்’ என்றும், அதற்கடுத்து வரும் புயலுக்கு ‘தித்வா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ‘சென்யார்’ என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகமும், ‘தித்வா’ பெயரை ஏமன் நாடும் சூட்டியுள்ளது.
